நிறைவேறாமல் சென்ற விவேக்கின் கடைசி ஆசை… சொல்லமுடியாத துயரில் மக்கள்…!!

Uncategorized



மாரடைப்பினால் மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் இன்று காலை 4.35 மணியளவில் உயிரிழந்தார். நடிகர் விவேக் நெஞ்சு வலி காரணமாக நேற்று காலை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கார்டியாக் நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ரசிகர்கள் பிரபலங்கள் அனைவரும் தங்களது பிரார்த்தனை செய்து வந்ததோடு, தொடர் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்டு, அது கைகொடுக்காத நிலையில் எக்மோ சிகிச்சையை மருத்துவர்கள் தொடர்ந்தனர்.



ஆனால் அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாகவே இருக்கின்றது என்றும் 48 மணிநேரம் கழிக்க வேண்டும் என்று கூறிவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளது ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விவேக் தனது இறுதியாக ஆசைப்பட்டதை அடையாமல் சென்றுள்ளது பெரும் வேதனையினை அளிக்கின்றது.

ஆம் அனைத்து முன்னணி பிரபலங்களுடன் நடித்து தனது திறமையினையும், வாதத்தினையும் தெளிவாக வைத்த விவேக் நடிகர் கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருந்தது. அவருடன் மட்டும் நடித்துவிட்டால் தனது ஆசை நிறைவேறிவிடும் என்று கூறிய நிலையில், இந்தியன் 2 படத்தில் அவருடன் நடித்து வந்தார்.



ஆனால் அப்படத்தில் தனது ஆசை முழுமையாக நிறைவேறாமல் தற்போது அனைவரையும் விட்டு பிரிந்துள்ளது பேரதிர்ச்சியினையும், பெரும் சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *