இசைக்கு மயங்காதவர் யாரும் இல்லை எனச் சொல்வார்கள். இப்போது அதை மெய்ப்பிக்கும்வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இசை என்றாலே அனைவருக்கும் கொள்ளைப் பிரியம் தான். இவ்வளவு ஏன் பாம்பைப் பார்த்தால் படையே நடுங்கும் என்பார்கள். அந்த பாம்பே கூட மகுடி இசைக்கு மயங்கி வலையில் சிக்குவதைப் பார்த்திருப்போம். அந்த அளவுக்கு இசை வாழ்வோடு இரண்டறக் கலந்தது. இசைக்கு மொழியே கிடையாது. எந்த ஒரு இசையையும் மொழிகடந்து நாம் வெகுவாக ரசிக்கலாம். இங்கேயும் அப்படித்தான் இரண்டு வயதே ஆன பொடியன் தன் பெற்றோரோடு ஒரு திருவிழாவுக்கு வந்திருந்தான்.
அப்போது அங்கு கேரள பாரம்பர்ய முறைப்படி சிங்காரி மேளம் அடித்துக் கொண்டிருந்தனர். அதைக் கேட்டு மயங்கிய அந்த சிறுவன் தன்னை மறந்து செம ஆட்டம் போடுகின்றான்.
இரண்டு வயதிலேயே இசைக்கு ஏற்ப உடலை அசைக்கும் அந்த சிறுவனை அங்கு இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்துப் பதிவிட அது இப்போது செம வைரல் ஆகிவருகிறது.