தி ருமண மே டையில் ம ணமக ளுக்கு பின்னால் ந ட ந்த ச ம்ப வ ம் : உறவினர்களுக்கு கா த் திருந்த அ தி ர்ச் சி…!!

Uncategorized

தமிழகத்தில் திருமண வீட்டில் மொய் எழுதுவதாக, கூறி இளைஞர் ஒருவர் மொய்ப் பணம் முழுவதையும் திருடிச் சென்ற சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூவர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, மாம்பாக்கத்தைச் சேர்ந்த நவீன் என்பவருக்கும், ஆந்திரா மாநிலம் தடாவைச் சேர்ந்த பிந்து என்பவருக்கும் நேற்றிரவு கவரைப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்றிரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அன்பளிப்பு பணத்தை மணமக்களிடம் வழங்கியுள்ளனர்.

மணமக்கள் அதனை வாங்கி தங்களது உறவினர்களிடம் கொடுத்து வந்தனர். இரவு மணமேடை அருகே வந்த மர்ம நபர் ஒருவர், நான் சாப்பிட்டுவிட்டேன், நீங்கள் சென்று சாப்பிடுங்கள் என்று மொய் பையை வைத்திருந்தவரிடம் கூறியுள்ளார். இதனால் அந்த நபரும் இவர் சொல்வதைக் கேட்டு, அந்த மொய் பையை அவரிடம் கொடுத்துவிட்டு, சாப்பிடுவதற்கு சென்றுள்ளார். அதன் பின் சற்று நேரத்தில் அந்த நபர் மொய் கவர்கள் நிறைந்த பையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

ஆரம்பத்தில் இதை அவர்கள் உணராமல், சில மணி நேரங்களுக்கு பின் உறவினர்களுக்கு இந்த விஷயம் தெரியவர, அவர்கள் உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அந்த நபர் சுமார் 1 லட்சம் ரூபாய் வரை மொய்ப் பணத்தை திருடியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதையடுத்து, திருமண வரவேற்பு நிகழ்சியைப் பதிவு செய்த கமெராவில் அந்த நபர் பதிவாகியுள்ளதால், அதை வைத்து பொலிசார் குறித்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *