ஆடியோ லீக் குக்கு எண்ட் கார்டு போட்ட நடிகர்! வாட்ஸ் அப் காலில் மூழ்கும் நடிகைகள்!

Uncategorized

கால்ஷீட் சம்பந்தமா அந்த நடிகைக்கு போன் போட்டுக்கொண்டே இருந்திருக்கிறார் டைரக்டர். எப்ப போன் பண்ணினாலும் சுவிட் ஆப் சுவிட் ஆப்னு ரிப்ளே வந்ததால எரிச்சல் ஆகி, அசிஸ்ட்டெண்ட் டைரக்டரை விட்டு, அந்த நடிகை வீட்டுல இருக்குதா இல்லையான்னு வேவு பார்த்துட்டு வரச்சொல்லியிருக்கார். முன்ன எல்லாம் மாஸ்க் போட்டா டவுட்டா பார்ப்பாங்க. தூர ஓடிப்போவாங்க. இப்ப அப்படியா இருக்கு. மாஸ்க் போடலன்னாதானே டவுட் வருது. தூர ஓடுறாங்க. இது அந்த அசிஸ்ட்டெண்ட் டைரக்டருக்கு ரொம்ப வசதியா போச்சு. முகத்துக்கு மாஸ்க் போட்டுக்கிட்டு, தலைக்கும் ஹெல்மெட் போட்டுக்கிட்டு நடிகை ஏரியாவுல ரவுண்ட் அடிச்சிருக்கார். அப்ப பால்கனி பக்கம் வந்துட்டு போயிருக்கார் நடிகை.

உடனே டைரக்டருக்கு போன் போட்டு விசயத்தை சொல்ல, ‘’உடம்புக்கு ஏதும் சுகம் இல்லாம இருக்கலாம். அதான் போனை சுவிட் ஆப் செஞ்சு போட்டிருக்கலாம்’னு அவர் சொல்ல, ‘’அதுதான் சார் இல்ல. அவுங்க சிரிச்சு பேசிக்கிட்டு இருக்காங்க’’ன்னு சொன்னதை கேட்டு அதிர்ச்சியாகிட்டாராம். ‘’இருடா…’’ன்னு சொல்லி அசிஸ்ட்டெண்ட் லைனை ஹோல்டில் வச்சிட்டு, செகண்ட் லைனில் நடிகைக்கு ட்ரை பண்ண, சுவிட்ச் ஆப்னுதான் அப்பவும் ரிப்ளே. கடுப்பான டைரக்டர், நடிகையோட மேஜேனருக்கு போன் போட்டு, நடிகையோட வேற நெம்பர் கொடுன்னு சொல்ல, அதுக்கு அவர் சுவிட்ச் ஆப் நெம்பரையே கொடுத்திருக்கார். என்கிட்ட விளையாட்டு காட்டுறீங்களா.

அப்புறம் எப்படி அவ சிரிச்சு பேசிக்கிட்டு இருக்குறான்னு காட்டு கத்து கத்தவும், அட, இதுவா சார். அவுங்க வாட்ஸ் அப் காலில் பேசிக்கிட்டு இருப்பாங்கன்னு சொல்ல, அப்புறம் எப்படிய்யா போன் சுவிட் ஆப்னு வருதுன்னு கேட்க, இது கூட புரியலையா சார். அவுங்க சிம்’மை கழட்டி வச்சிட்டு வாட்ஸ் ஆப் காலில் பேசிக்கிட்டு இருப்பாங்க. வாட்ஸ் ஆப்ல பேச வைபை போதும் சார்னு சொல்ல, ‘’எதுக்குய்யா இந்த வேலையெல்லாம்…’’னு டைரக்டர் அப்பாவியாய் கேட்டிருக்கிறார். ரகசியமா பேசுறவங்க எல்லாம் இப்ப வாட்ஸ் ஆப் காலுலதான் பேசுறாங்க. ஆடியோ லீக் ஆகாதுங்குற காரணத்துனால இப்ப பெரும்பாலான நடிகைங்க இந்த டெக்னிக்கைத்தான் பாலோவ் பண்ணுறாங்க.

நடிகர்,டைரக்டர், புரடியூசர்னு எல்லோரும் இப்ப இந்த டெக்லதான் போய்க்கிட்டிருக்காங்கன்னு சொல்லவும், அதுக்கு எதுக்குய்யா சிம்மை கழட்டி வீசணும்னு கேட்க, ஆழ்ந்து பேசிக்கிட்டு இருக்குற நேரத்துல நொச்சு நொச்சுன்னு போன் வந்தா எரிச்சல் வராதா? அதான் சிம்மை தூக்கி கடாசிடுறாங்கன்னு சொல்லி சிரிச்சவரிடம், ’’சூப்பர் ஐடியாதான் போ’’ன்னு சொன்னவரிடம், இதுக்கு காரணமே சூப்பர் நடிகர்தான்னு சொல்ல, அவருக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்?னு கேட்டப்பதான் விவரமா சொல்லியிருக்கார் அந்த மேனேஜர். சினிமாவுல புதுசா வந்து சக்சஸ் கொடுக்குற எல்லாருக்கும் போன் போட்டு வாழ்த்து சொல்லுறது அவரோட வழக்கம். அப்டிதான் அந்த டைரக்டருக்கும் போன் போட்டு வாழ்த்து சொல்லியிருக்கார்.

அவரே போன் போட்டு வாழ்த்துனத கெத்து காட்ட அந்த ஆடியோவ ஆர்வத்துல ஒருத்தருக்கு அனுப்ப, அவர் மூலமா சமூக வலைத்தளத்துல வைரலாக, மறுபடியும் லைனில் வந்த நடிகர், என்னப்பா இப்படி பண்ணிட்டியேன்னு கேட்க, ஆடியோ லீக் ஆச்சு சார்னு சொல்ல, நீயும் நானும் பேசுனது எப்டி லீக் ஆகும். மொபைல் உன்கிட்டதானே இருக்குன்னு மடக்கியிருக்கிறார் நடிகர். அந்த டைரக்டர் அப்போ சமாளிச்சாலும், ‘ஆடியோ லீக்’ விசயம் இண்டஸ்ட்ரியில ரொம்ப பரபரப்பா இருந்தப்பதான், பலரும் ரெக்கார்டு பண்ண முடியாத வாட்ஸ் ஆப் கால் ரகசியத்தை ஷேர் செய்திருக்காங்க. அதுலதான் இப்ப எல்லோரும் மூழ்கி இருக்காங்க சார்னு சொல்லிட்டு, அந்த மேனேஜர் ஒரு நடிகையோட நம்பரை கொடுத்து,

அவுங்க ஓட்டல் ரூம்லதான் இருக்காங்க. அதுமட்டுமில்ல யார்கிட்டயோ ரொம்ப நேரமா சிரிச்சு பேசிக்கிட்டு இருக்காங்க. நான் ஓட்டல் ரிசப்சன்லதான் இருக்கேன். வேணும்னா ட்ரை பண்ணி பாருங்களேன்னு சொல்ல, டைரக்டரும் அந்த நம்பருக்கு போன் போட, சுவிட்ச் ஆப்னு வந்திருக்குது ரிப்ளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *