கிரிக்கெட்டிற்கு NO சினிமாக்கு YES களமிறங்கும் தலை தோனி!

Uncategorized

மகேந்திரசிங் தோனி (Mahendra Singh Dhoni, சுருக்கமாக எம் எஸ் தோனி என்று அறியப்படுகிறார் ; பிறப்பு: 7 சூலை, 1981) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரரும் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும் , 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக இருந்தார். இவரின் தலைமையில் 2007 ஐசிசி உலக இருபது20 2007-08 பொதுநலவய போட்டித் தொடர், 2010மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2013 ஐசிசி வாகையாளர் ஆகிய கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. நடுவரிசை மட்டையாளரும் இலக்குக் கவனிப்பாளரான இவர் ஒநாப போட்டிகளில் 10,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை எடுத்துள்ளார்.

இவர் வரையிட்ட நிறைவுப் போட்டிகளில் சிறப்பாக ஆட்டத்தினை முடித்துவைக்கும் திறன் கொண்டவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[2][3][4][5] மேலும் தற்கால வரையிட்ட நிறைவுத் துடுப்பாட்டத்தின் சிறந்த இலக்குக் கவனிப்பாளர்களில் ஒருவராகவும் சிறந்த அணித்தலைவராகவும் கருதப்படுகிறார்.இந்நிலையில், திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதோடு, “இதுவரை உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. மாலை 7.29 மணியிலிருந்து நான் ஓய்வுபெறுவதாகக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்ர்தர்.

அந்தக் காணொலியில், அவர் இந்திய அணியில் ஆடிய முதல் ஆட்டத்திலிருந்து பல நினைவுகளின் தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன.  ஏற்கனவே 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். விராட் கோலி அணிக்கு தலைமையேற்ற சமயத்திலிருந்தே தோனியின் ஓய்வு குறித்துப் பல முறை ஊடகங்களில் விவாதிக்கப்பட்து .  தோனியின் இந்த திடீர் அறிவிப்பு அவரது எண்ணற்ற ரசிகர்களுக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

இப்போது அவர்  ஒரு புராண அறிவியல் கதை கொண்ட வெப் சீரிஸ் ஒன்றைத் தயாரிக்க இருக்கிறார்.இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஆண்டு Roar Of The Lion, என்ற ஆவணப்படத்தைத் தயாரித்தார்.  தற்போது வெப் சீரிஸ் ஒன்றை தனது தோனி என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். தனது கிரிக்கெட் ஓய்விற்குப் பிறகு சினிமாவின் தயாரிப்பாளராக களமிறங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், ஒரு அறிமுக எழுத்தாளரால் எழுதப்பட்டு வெளியிடப்படாத ஒரு புத்தகத்தின் உரிமையைப் பெற்றுள்ளது.மேலும் அந்தப் புத்தகத்தை வெப் சீரிஸாக மாற்றுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது.புராண மந்திரக்கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இந்த வெப் சீரிஸ் ஒரு அகோரியின் வாழ்க்கைக் கதையைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வெப் சீரிஸ் ஒரு தனி தீவில் படமாக்கப்படும் என்று தோனி என்டர்டெயின்மென்ட்டின் நிர்வாக இயக்குனர் சாக்ஷிதோனி தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *